வணக்கம் நண்பர்களே! 🙏🙏🙏
இந்த பதிவில் குளிகை நேரத்தை பற்றியும், குளிகை நேரத்தினை பார்ப்பதினால் கிடைக்கும் நன்மைகளையும், எப்படி எளிதாக குளிகை நேரத்தினை மனதில் பதியவைப்பது என்பதையும் காண்போம்..
குளிகை (குளிகன்)
குளிகை என்பது குளிகன் என்று பொருள். இந்த குளிகன் யார்? என்றால் சனீஸ்வரன் மற்றும் ஜேஷ்டாதேவி ஆகிய தம்பதிகளின் புதல்வன் ஆவார், குளியலுக்கு மாந்தி என்ற தங்கையும் உண்டு குளிகனின் தாயார் ஜேஷ்டா தேவி என்று தமிழ் பெயரால் அழைக்கப்படுகிறார் இப்படிப்பட்ட குளிகன் என்ற பெயர் பெற்ற இவருக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டுள்ளது
அந்த நேரத்தில் ஒரு நல்ல விஷயத்தை நாம் செய்யும் போது அந்த செயல்கள் திரும்பத் திரும்ப செய்வது போன்ற நிலை ஏற்படும் எனவே நமது முன்னோர்கள் இந்த குளிகை நேரத்தை நல்ல செயல்கள் செய்யவும் சுபகாரியங்கள் தொடங்கவும் கடனை திருப்பிக் கொடுக்கவும் ஆகிய நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர்
ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நேரத்தில் செய்கின்ற செயலானது வளர்ந்து கொண்டே இருக்கும், அதனால் கடன் வாங்குவது, வீட்டை காலி செய்வது, இறந்தவர் உடலை கொண்டு செல்வது, ஆகிய அசுப நிகழ்வுகளை இந்த நேரத்தில் செய்யக்கூடாது,
இதை மனதில் வைத்து இந்த நேரத்தை நாம் பின்பற்றும் போது வாழ்வில் பல உன்னத நிலையை அடையலாம்.
இப்போது இந்த குளிகை நேரம் எப்படி நாள்தோறும் வருகிறது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் நீங்கள் காணலாம்,
மனதில் பதிய வைக்க எளிய வழி
இந்த அட்டவணையில் பார்த்தபடி குளிகை நேரத்தை மனதில் பதிய வைக்க ஒரு எளிய உத்தி உள்ளது, அதாவது நீங்கள் கவனித்தீர்கள் என்றால், ஒரு நாளுக்கு இந்த குளிகை நேரம் ஆனது ஒன்றரை மணி நேரம் ஆகும், இதில் காலை 6 மணியிலிருந்து மாலை நாலரை மணி வரை வருகிறது.
இதன்படி பார்த்தோமேயானால் சனிக்கிழமை இந்த நேரமானது ஆறிலிருந்து ஏழு மணி வரை இருக்கிறது வெள்ளிக்கிழமை ஏழரையில் இருந்து ஒன்பது வரை இருக்கிறது, ஆகவே சனிக்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை, திரும்ப வியாழக்கிழமை என்று கீழ்நோக்கி எண்ணி வரவேண்டும், சனிக்கிழமை ஆறிலிருந்து ஏழு மணி வரை வைத்துக் கொண்ட மாதிரி அடுத்த ஒன்றரை மணி நேரம் ஒவ்வொரு நாளும் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் இப்படி ஞாயிற்றுக்கிழமை வரை பார்த்தோமானால் இந்த நேரம் மாலை 4.30 வரை வந்துவிடும், எளிதாக மனனம் செய்து கொள்ள இது ஒரு எளிய வழியாகும்,
கடினமாக தோன்றினால் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொண்டு,உள்ளபடி பின்பற்றினால் தங்களது வாழ்வும் கடவுள் அருளால், வசந்தம் வீசும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
இது போன்ற பல ஜோதிடம் தொடர்பான தகவல்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தாங்களும் பயன்பெறுமாறு ,ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம் சார்பில் கேட்டு கொள்கிறோம்,நன்றி ...🙏🙏🙏🙏
இந்த பதிவை வீடியோ வடிவில் காண இந்த லிங்க்கை யை கிளிக் செய்யுங்கள்.
Sir nalla